பஞ்சாபில் இரவு ஊரடங்கு அமல்: பள்ளி, கல்லூரிகள் மூடல்

பஞ்சாபில் இரவு ஊரடங்கு அமல்: பள்ளி, கல்லூரிகள் மூடல்
பஞ்சாபில் இரவு ஊரடங்கு அமல்: பள்ளி, கல்லூரிகள் மூடல்

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை போல் பஞ்சாப் மாநிலத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஒமைக்ரான் மற்றும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவது குறித்தும், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் ஆலோசனை நடந்தது.

இதன் பின்னர் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் மாநகராட்சி பகுதியில் ஜனவரி 15 ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கு இருக்கும். பள்ளி, கல்லூரிகள் மற்றும் பலகலைக்கழகங்களில் நேரடி வகுப்புகள் மூடப்படுவதுடன், ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மருத்துவ மற்றும் நர்சிங் கல்லூரி வழக்கம் போல் செயல்படலாம்.

பார்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், ஸபாக்கள், அருங்காட்சியகங்கள், விலங்கியல் பூங்காக்கள் 50 சதவீதம் பேருடன் செயல்படலாம். அங்கு பணிபுரிபவர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

விளையாட்டு அரங்குகள், மைதானங்கள், நீச்சல் குளங்கள் மற்றும் ஜிம்கள் மூடப்படும். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி பெறுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் முழு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com