ராஜஸ்தான் : 13 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு

ராஜஸ்தான் : 13 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு
ராஜஸ்தான் : 13 மாவட்டங்களில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு

ராஜஸ்தான் மாநிலத்தின் பதின்மூன்று நகர்ப்புற  மாவட்டங்களில், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், அஜ்மீர், ஆல்வார், பில்வாரா, நாகூர், பாலி, டோங்க், சிகார் & கங்கநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது.

இரவு 8 மணிமுதல் 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தில் அனைத்து அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. ஊரடங்கு நேரத்திற்கு முன்பே அனைவரும் தங்கள் வீடுகளை அடைவதற்கு ஊழியர்கள் அனைவரும் இரவு 7 மணிக்குள் அலுவலகம், கடைகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும், இரவு ஷிப்டுகள், மருந்துப்பொருள் கடைகள், அவசர சேவைகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com