வாள், பட்டா கத்திகளுடன் சண்டையிட்டு கொண்ட நைஜீரியர்கள்: டெல்லியில் பயங்கரம்
டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வாள், பட்டா கத்திகளுடன் நைஜீரியர்கள் சண்டையிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லி, சாக்கெட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நைஜீரியர்கள் 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக பெற வந்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் காயம் அடைந்த நைஜீரியர்களுக்கும் மற்றொரு தரப்பு நைஜீரியர்களுக்கும் மருத்துவமனை வளாகத்திற்குள் சண்டை நடைபெற்றது. நைஜீரியர்கள் இரு குழுக்களாக கத்திகளைக் கொண்டு தாக்கிக் கொண்டதை கண்ட மருத்துவமனை அலுவலர்கள், செவிலியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். சிலர் டாய்லெட்களில் ஒளிந்து கொண்டனர்.
சண்டையில் மருத்துவமனையின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தன. ஆட்டோ ரிக்ஷாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சண்டை உருவானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தியுடன் நைஜீரியர்கள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் மருத்துவமனை கேமராவில் பதிவாகியுள்ளன. அவர்களை தடுக்கச் சென்ற காவலரும் தாக்கப்பட்டார். போலீசார் வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர்.