இந்தியா
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ சோதனை
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த புகார் தொடர்பாக காஷ்மீரில் 12 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இச் சோதனையை மேற்கொண்டனர். தலைநகர் ஸ்ரீநகர், பாரமுல்லா, ஹந்த்வாரா உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடைபெற்றது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தார்கள் என்ற புகாரில் சம்மந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தொடர்புள்ள இடங்களில் சோதனைகள் நடைபெற்றன.
காஷ்மீரில் வன்முறை நடவடிக்கைகளைத் தூண்டிவிட பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த புகாரில் கடந்த மாதம் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.