ஆந்திராவில் உள்ள பல்வேறு பகுதிகளில், மக்கள் இயக்கங்களின் தலைவர்களின் வீடுகள், மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட நக்சலைட் குழுக்கள் தொடர்பான வழக்குகள் தொடர்புடைய இடங்கள். போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடுகள் உள்ளிட்ட போலீசாருக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடிய வக்கீல்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திராவில் 60 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர் இதனால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த செம்மரக் கடத்தில் கூலிகள் 20 பேர் திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய திருப்பதியைச் சேர்ந்த வக்கீல் கிராந்தி சைதன்யா வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.