தங்கக் கடத்தல் விவகாரம் : சிவசங்கரனிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

தங்கக் கடத்தல் விவகாரம் : சிவசங்கரனிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை
தங்கக் கடத்தல் விவகாரம் : சிவசங்கரனிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை

கேரள முதலமைச்சரின் முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான வழக்கை தேசிய புலானாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கேரள முதல்வரின் முன்னாள் முதன்மை அரசு செயலரும், கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்கும் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அரசு செயலாளருமான சிவசங்கரனிடம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது அவரிடம் இரண்டாவது முறையாக நடத்தப்படும் விசாரணையாகும்.

முன்னதாக, சிவசங்கரனிடம் கடந்த 23ஆம் தேதி திருவனந்தபுரத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் இன்று 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய பிரதிகளான ஸ்வப்னா சுரேஷ், சரத்குமார், சந்தீப் நாயர் ஆகியோருடான நெருங்கிய உறவு குறித்தும், தங்க கடத்தலில் தொடர்புள்ளதா என்பது குறித்தும் அவருடன் விசாரிக்கப்படுவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com