பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேமுகநூல்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு விவகாரம் | தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்.. NIA அறிவிப்பு!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய 2 முக்கிய குற்றவாளிகளின் புகைப்படங்களை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது.
Published on

மார்ச் ஒன்றாம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் குண்டு வெடித்தது. இது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இதுதொடர்பாக கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள 18 இடங்களில் சோதனை நடத்தினர்.

இதில் முஷாமி ஷரீப் என்பவர் என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவர் குண்டுவெடிப்பு திட்டத்திற்கு துணையாக செயல்பட்டதை என்.ஐ.ஏ அதிகாரிகள் கண்டறிந்ததாகவும், முசாவீர் சாஹிப் ஹுசைன் மற்றும் அப்துல் மதீன் தாஹா எனும் மேலும் இரண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே
பெங்களூரு: பறிபோன ஐ.டி. வேலை.. ஹாஸ்டல்களில் லேப்டாப்களைத் திருடி பல லட்சம் சம்பாதித்த நொய்டா பெண்!

இந்நிலையில் தேடப்படும் இரண்டு குற்றவாளிகளின் புகைப்படங்களை என்.ஐ.ஏ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் என்.ஐ. ஏ. அறிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com