பீகார்|உடல்நலம் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகள்.. பள்ளியில் சாப்பிட்ட உணவுதான் காரணமா?
பீகாரில் அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 குழந்தைகளுக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 24 அன்று பாட்னாவின் மொகாமா பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக மே 1 ஆம் தேதியன்று, தேசிய மனித உரிமை ஆணையம் பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணம் என்ன? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அரசு பள்ளியில் பணியாற்றி வந்த சமையல்காரர் உணவில் இறந்த கிடந்த பாம்பை அகற்றிய பின்னர், அதே உணவை குழந்தைகளுக்கு பாரிமாறியுள்ளதாக அதிர்ச்கர தகவல் கிடைத்துள்ளது.
இதை சாப்பிட்ட குழந்தைகள் உடல்நல கோளாறால் அவதியடைய அருகிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், மேலும், இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பீகார் அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் பாட்னாவின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.