\
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே?

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே?
Published on

உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எஸ்.ஏ.பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக்க, தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பதவிக் காலம் வரும் நவம்பர் 17-ஆம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்னர் அயோத்தி வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அதன் தீர்ப்பை வழங்கிவிட்டு ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நவம்பர் 18-ஆம் தேதி பதவியேற்கலாம் என்றும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி  அப்பதவியில் நீடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com