வட இந்தியப் பயணமா? வீசப்போகும் குளிர் அலை.. தமிழகத்தில் எப்படி? எச்சரிக்கும் IMD!
அடுத்த ஐந்து நாட்களுக்கு வட இந்தியாவில் காலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி நிலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகமான குளிர் நிலவி வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லி முதல் வட இந்திய மாநிலங்கள் பலவும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி நிலை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 5 முதல் 7 வரை கிழக்கு ராஜஸ்தானின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும், ஜனவரி 5ஆம் தேதி ஜார்க்கண்டிலும், ஜனவரி 5 முதல் 7 வரை மேற்கு ராஜஸ்தான் மற்றும் துணை இமயமலை மேற்கு வங்காளத்திலும்; ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் கங்கை மேற்கு வங்காளத்திலும் பகல் நேரத்தில் குளிர் நிலவும் என அது தெரிவித்துள்ளது.
மேலும், பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 6 முதல் 9 வரையிலும், கிழக்கு ராஜஸ்தனில், ஜனவரி 6 முதல் 10 வரையிலும் மேற்கு ராஜஸ்தானில் ஜனவரி 8 முதல் 10 வரையிலும் சத்தீஸ்கர், ஜனவரி 6 முதல் 8 வரையிலும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் குளிர் அலை வீச வாய்ப்புள்ளது என அது தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, கேரளா மற்றும் மாஹேவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

