\
செய்தி ஊடகங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டை மீண்டும் தொடங்க கோரிக்கை

செய்தி ஊடகங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டை மீண்டும் தொடங்க கோரிக்கை

செய்தி ஊடகங்கள் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டை மீண்டும் தொடங்க கோரிக்கை
Published on
பார்வையாளர்கள் அடிப்படையிலான செய்தி ஊடகங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் நடவடிக்கையை மீண்டும் உடனடியாக தொடங்க வேண்டும் என மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரிடம், செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
டெல்லியில் மத்திய அமைச்சரை செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது செய்தி ஊடகங்களின் செயல்பாடு, செய்தி சேகரிக்கும் பணியில் சந்திக்கும் சவால்கள் போன்றவை குறித்து அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். செய்தி ஊடகங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீட்டின் அவசியம் குறித்தும் அமைச்சரிடம் கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், இருதரப்பு கருத்து பரிமாற்றங்கள் சிறப்பாக நடைபெற்றதாகவும், நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பணியில் செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்போடு இணைந்து செயல்படுவதை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com