ஓவர் டோஸ் வயாகராவால் புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ஓவர் டோஸ் வயாகராவால் புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!
ஓவர் டோஸ் வயாகராவால் புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

புதிதாக திருமணமான நபர் ஒருவர் நண்பர்களின் பேச்சை கேட்டு இல்லற வாழ்வுக்காக அளவுக்கதிகமான வயகாரா மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கதிக்கு ஆளாகியிருக்கிறார்.

உத்தர பிரதேசத்தின் பிரயக்ராஜ் பகுதியைச் சேர்ந்த நபருக்குதான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அந்த நபருக்கு திருமணம் நடந்திருக்கிறது. தாம்பத்தியத்தில் குறைபாடு இருந்ததன் காரணமாக நண்பர்கள் சிலரின் அறிவுரையை கேட்டு வயாகரா மாத்திரையை உட்கொண்டிருக்கிறார்.

தொடக்கத்தில் அவருக்கு எவ்வித உபாதைகளும் ஏற்படவிலை. ஒரு கட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட 4 மடங்கு அதிகமாகவே அந்த நபர் வயாகராவை எடுத்திருக்கிறார்.

ALSO READ: 

இந்த நிலையில் திடீரென உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டதோடு அவரது பிறப்புறுப்பின் விறைப்புத்தன்மையும் அதிகரித்து கடுமையான வலியை உண்டாக்கியிருக்கிறது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு செயற்கை அறுவை சிகிச்சையும் வழங்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து வயகாரா மாத்திரை எடுத்துக்கொண்ட அந்த நபருக்கு வலி குறைந்திருந்தாலும் பிறப்புறுப்பில் ஏற்பட்ட அந்த விறைப்புத்தன்மை வாழ்நாள் முழுவதும் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இருப்பினும் வழக்கம் போல அவர் தன்னுடைய தினசரி வாழ்க்கையை கடத்தலாம், குழந்தையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவரது வீக்கத்தை மறைக்க எப்போது இறுக்கமான ஆடையையே அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருக்கிறார்.

நண்பர்களின் ஆலோசனை மற்றும் இண்டெர்நெட்டில் பார்த்து படித்து இது போன்ற சிக்கலில் சிக்கிக் கொள்ளலாமல், உடலிலோ மனதிலோ ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை மேற்கொள்வதே சாலச்சிறந்தது.

ALSO READ: 

ஸ்டீராய்டுகளை உட்கொள்பவர்கள் கவனத்துக்கு... - பக்கவிளைவுகளும் முன்னெச்சரிக்கையும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com