இந்தியா
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலம்
நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலம்
2017ம் ஆண்டுக்கு விடைகொடுத்துவிட்டு 2018ம் ஆண்டை இந்தியா முழுவதும் மக்கள் வரவேற்றனர்.
உற்சாக கொண்டாட்டங்களுக்கு புகழ்பெற்ற கோவாவில் நட்சத்திர விடுதிகளில் பாரம்பரிய நடனங்களோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் அரங்கேறின. இக்கொண்டாட்டங்களை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோயில் புத்தாண்டை முன்னிட்டு ஒளிவெள்ளத்தில் ஜொலித்தது.
தலைநகர் டெல்லியில் பொது இடங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் கொண்டாட்டங்கள் நடந்தன. நடிகை கங்கனா ரணாவத் நடனமாடிய நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலிலும் புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சி பொங்க கொண்டாடினர். அதிரவைக்கும் இசையுடன் அரங்கேறிய நடனங்கள் பார்ப்போரின் மனம் கவரும் வகையில் இருந்தன.