\
பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்:  சிரோன்மணி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி

பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்: சிரோன்மணி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி

பஞ்சாப் அரசியலில் புதிய திருப்பம்: சிரோன்மணி அகாலிதளம் - பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி
Published on

பஞ்சாப் மாநிலத்தில், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், சிரோன்மணி அகாலிதளம் மற்றும் பகுஜன் சமாஜ் இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.

பஞ்சாப்பில் தற்போகு அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம், மாயாவதியின் பகுஜான் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக, பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.

தங்களது கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அவர் கூறினார். பாஜக கூட்டணியிலிருந்து இடம்பெற்றிருந்த, சிரோன்மணி அகாலிதளம், மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரச்னையில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com