பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்; இனி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்; இனி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தெரியுமா?
பட்ஜெட்: வருமான வரி உச்சவரம்பில் மாற்றம்; இனி யார் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன் சில விவரங்கள் இங்கே:

“தொலைக்காட்சி, செல்போன், கேமரா உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது (இதன்மூலம் அவற்றின் விலைகள் குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது). வருமான வரி விலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆகவே ஆண்டுக்கு மொத்த வருமானம் ரூ. 7 லட்சம் வரை இருப்போருக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே ரூ.5 லட்சம் வரை இருந்த இந்த வரம்பு, தற்போது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

புதிய வரிமுறையில் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன்படி புதிய வரிமுறையில் உள்ளவர்களில், ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கிடையாது. இதுவே ஆண்டுக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 15% வரி செலுத்தவேண்டும். ஆண்டுக்கு ரூ7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை வருமானம் இருப்பவர்களுக்கு 5% வரி செலுத்த வேண்டும்.

ஆண்டுக்கு ரூ. 15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்கள், 30%-ஐ வரியாக செலுத்த வேண்டும். வருமான வரி அடுக்குகள் (SLAB) 7-லிருந்து 5-ஆக குறைக்கப்படும். இதுவரை தனிநபருக்கான உச்சபட்ச வரி 42% ஆக இருந்த நிலையில், உச்சபட்ச வருமான வரி 40% க்கும் கீழ் குறைந்தது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com