நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கையிலெடுத்துள்ள புதிய வியூகம்! பலன் கொடுக்குமா?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக ஓபிசி வாக்கு வங்கியை பலப்படுத்த காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரசின் புதுவியூகம் கைகொடுக்குமா என விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெறுவதையொட்டி நாடு முழுவதும் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக இந்தியா என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்த நிலையில், பாஜகவை வீழ்த்த ஓபிசி வாக்கு வங்கியை கவர்வது முக்கியமானது என காங்கிரஸ் தலைமை கணித்துள்ளது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே என முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஓபிசி இடஒதுக்கீட்டை வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com