இருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் - மத்திய அரசு திட்டம்

இருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் - மத்திய அரசு திட்டம்

இருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள் - மத்திய அரசு திட்டம்
Published on

இருசக்கர வாகனங்களுக்கு வரும் அக்‌டோபர் மாதம் முதல் புதி‌ய விதிகளை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக புதிய விதிகள் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்த மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்புடன் பயணிக்க முடியும் எனவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் எனவும் நம்பப்படுகிறது.

இந்த புதிய விதியின்படி, இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்கு, நம்பர் பலகை இருக்கவேண்டும் என்பது போல, வாகன ஓட்டிகள்‌ தலைக்கவ‌சம் அணிவதும் கட்‌டா‌யமாக உள்ளது. பின் இருக்கையில் அமர்பவர்கள் கால் வைக்க புட்‌ ரெஸ்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். பின் சக்கரத்தை‌ பாதியாக மறைக்கும் வரை மட் கார்ட் பொருத்த வேண்டும்.

மேலும், பின்னால் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கையை ஒட்டி கைப்பிடி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com