ஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்

ஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்

ஊடக சமநிலையில் இந்தியா முதலிடம் : ஆய்வு நிறுவனம் தகவல்
Published on

அரசியல் பாரபட்ச உணர்வுடன் ஊடகங்கள் செயல்படுவதில் உலகிலேயே இந்தியா கடைசி இடத்தில் உள்ளது. அதாவது, இந்திய ஊடகங்கள் அதிக பாரபட்சமின்றி செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகள் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கவே முடியாத அளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. அங்கு செய்திகளை ஏற்க முடியாத அளவு 84 சதவிகிதமாகவும், ஏற்குமளவு 16 சதவிகிதமாகவும் உள்ளது. 

கனடாவில் இது 82 சதவிகிதம் மற்றும் 18 சதவிகிதம். ஏற்க முடியாத பாரபட்ச செய்திகளில் அமெரிக்க ஊடகங்கள் 79 சதவிகிதமாகவும், ஏற்கத்தக்க அளவு 21 சதவிகிதமாகவும் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் முறையே, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா, ரஷ்யா ஆகி‌யவை உள்ளன. பாரபட்ச செய்திகள் வழங்கும் ஊடகங்கள் உள்ள நாடுகள் வரிசையில் இந்தியா கடைசி இடத்தில் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. 

இந்தியாவில் ஏற்கத்தக்க செய்தி அளிப்பது 40 சதவிகிதமாகவும், ஏற்க முடியாத அளவாக 23 சதவிகிதமும் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 37 சதவிகித தகவல்கள் நடுநிலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், பிரேசில், தென்ஆப்ரிக்கா ஆகிய 4 நாடுகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com