\
2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி புதிய மனு !

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி புதிய மனு !

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி புதிய மனு !
Published on: 

2ஜி வழக்கை விரைவாக விசாரிக்கக்கோரி சிபிஐ மற்றும், அமலாக்கத் துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி அமர்வு முன் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த தகவலை சிபிஐ, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோனியா மாத்தூர் தெரிவித்தார்.

ஆனால் விரைந்து விசாரிக்க கோரிய மனுக்கள், அதிகாரப்பூர்வமாக இன்னும் பதிவேற்றபடவில்லை என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் சொத்துக்களை விடுவிக்க கோரிய மனு மீது விளக்கம் அளிக்க வழக்கறிஞர் விஜய் அகர்வாலுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணையை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com