பிரமிப்பூட்டும் புதிய நாடாளுமன்றம்... அரசு வெளியிட்ட வீடியோ!

பிரமிப்பூட்டும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வீடியோ காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா டெல்லியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா பூஜைக்குப் பிறகு, பிரதமர் மோடி, மக்களவைக்குள் சென்று சபாநாயகர் இருக்கைக்கு அருகில் கண்ணாடி பெட்டிக்குள் செங்கோலை நிறுவினார். அதனைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு விழாவை நினைவுகூரும் வகையில், பிரதமர் மோடி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். அத்துடன், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை நினைவுகூரும் தபால் தலையையும் பிரதமர் வெளியிட்டார். அதனை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.

4 மாடிகளைக் கொண்ட புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபிக்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரமிப்பூட்டும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வீடியோ காட்சிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதுகுறித்த வீடியோவை இங்கு காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com