ஏர் இந்தியாவுக்கு புதிய தலைவர்... யார் இந்த கேம்பல் வில்சன்?

ஏர் இந்தியாவுக்கு புதிய தலைவர்... யார் இந்த கேம்பல் வில்சன்?
ஏர் இந்தியாவுக்கு புதிய தலைவர்... யார் இந்த கேம்பல் வில்சன்?

ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கேம்பல் வில்சனை நியமனம் செய்திருக்கிறது டாடா குழுமம். 50 வயதாகும் இவர் விமான போக்குவரத்து துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஸ்கூட் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

துருக்கி ஏர்லைனஸ் சேர்ந்தவர் தலைமைச் செயல் அதிகாரியாக டாடா குழுமம் நியமனம் செய்தது. ஆனால் ஆர் எஸ் எஸ் அமைப்பிடம் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அதில் இருந்து துருக்கி ஏர்லைன்ஸை சேர்ந்தவர் விலகிகொண்டார். அதனால் தற்போது புதிய தலைமைச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

டாடா குழுமம் வசம் இருக்கும் மற்றொரு விமான நிறுவன விஸ்தாரா. இது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் கூட்டாக தொடங்கப்பட்ட நிறுவனம். அதனால் விஸ்தாரா மூலமாக ஏர் இந்தியாவுக்கு தலைமைச் செயல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியுசிலாந்து நாட்டை சேர்ந்தவர் இவர். 26 ஆண்டு விமான போக்குவரத்து துறை அனுபவம் கொண்டவர். பல சர்வதேச நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com