புதிய வருமான வரி
புதிய வருமான வரிமுகநூல்

புதிய வருமான வரி... மாற்றங்கள் என்ன என்ன..?

சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருக்கு சாதகமான அம்சங்களும் புதிய வருமான வரிச்சட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
Published on

புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவிருக்கிறது. எதற்காக இந்த புதிய மசோதா? இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்று வல்லுநர் விளக்கங்களுடன் பார்க்கலாம்.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக அமலில் உள்ள தற்போதைய சட்டத்துக்கு பதிலாக புதிய வருமான வரி சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி நிறைவடைய உள்ளதால், புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்கிறது மத்திய அரசு. 23 அத்தியாயங்கள் மற்றும் 536 பிரிவுகள் கொண்ட புதிய வருமான வரி சட்ட மசோதா, 622 பக்கங்கள் கொண்டதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

புதிய சட்டத்தால் வரி விகிதங்களில் மாறுதல் ஏதும் இல்லை என்றும், சட்டத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள் வல்லுநர்கள். முழுவதும் டிஜிட்டல் மயமாகவும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுகொண்டும் புதிய வருமான வரி சட்டம் நவீனப்படுத்தப்படுகிறது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதேபோல சிறு, குறு, நடுத்தர தொழில்துறையினருக்கு சாதகமான அம்சங்களும் புதிய வருமான வரிச்சட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. வரி விகிதங்கள், விலக்குகள் போன்ற அடிப்படை விஷயங்கள் மாற்றப்படவில்லை என்றும், தணிக்கை செய்யப்பட வேண்டிய கணக்குகளில் காலஅவகாசம் நீட்டிப்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் வல்லுநர்கள்.

புதிய வருமான வரி
Headlines|அமெரிக்க சென்ற பிரதமர் முதல் சீமானுக்கு பதிலடி கொடுத்த தவெக வரை!

நாடாளுமன்றத்தில் புதிய வருமான வரிச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டாலும், நாடாளுமன்றக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும், அடுத்த நிதியாண்டு முதல் புதிய வருமான வரிச்சட்டம் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com