மத்திய உள்துறையின் புதிய செயலாளராக, ராஜூவ் கவுபா பொறுப்பேற்றார்.
மத்திய உள்துறை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ராஜூவ் மெஹரிஹியின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து புதிய மத்திய உள்துறை செயலாளராக ராஜூவ் கவுபாவை, பிரதமர் மோடி நியமித்தார். இதையடுத்து அவர் இன்று பதவியேற்றுக்கொண்டார். கவுபா நகர்ப்புற வளர்ச்சி செயலாளராக செயல்பட்டு வந்தவர்.
இவர், 1980ஆம் பீகாரில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து 1982ஆம் ஆண்டு இமாச்சலப் பிரதேச உள்துறையில் பணிநிலை ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும், 1984ஆம் ஆண்டு கூடுதல் நகர்ப்புற வளர்ச்சி செயலாளராகவும் பணியாற்றிவர். தற்போது இரண்டாவது முறையாக உள்துறையில் பொறுப்பேற்றுள்ளார்.