ஏப்ரலில் வெளியாகிறது மாருதி சுசிகி செலிரியோ புதிய வெர்ஷன்

ஏப்ரலில் வெளியாகிறது மாருதி சுசிகி செலிரியோ புதிய வெர்ஷன்
ஏப்ரலில் வெளியாகிறது மாருதி சுசிகி செலிரியோ புதிய வெர்ஷன்

2014-ஆம் ஆண்டு வெளியான மாருதி சுசுகி செலிரியோ ரக வாகனத்தின் புதிய வெர்ஷன் வெளியாக உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மாருதி சுசுகியின் செலிரியோ வாகனம் சந்தைக்கு வந்தது. அதற்கு அடுத்த காலக்கட்டங்களில், இந்த காரில் பெரிதளவு மாற்றங்கள் இல்லாததாலும், பிற நிறுவனங்களின் கார்களின் வருகையாலும் மக்களிடம் இந்த காருக்கான வரவேற்பு குறைந்தது. இந்நிலையில் செலிரியோ காரின் புதிய வெர்ஷனை தற்போது மாருதி சுசுகி நிறுவனம் வெளியிட உள்ளது. இதற்கான பணி கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருவதாகவும், வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த காரானது சந்தைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

புகைப்பட உதவி:  AutoX

புதிதாக வெளிவர இருக்கும் இந்த கார் ஹியர் டெக் வடிவமைப்பு தளத்தைக் கொண்டு வடிவமைக்கப்படுவதால், முந்தைய மாடலை விட அதிக விசாலாமானதாக இருக்கும் எனத் தெரிகிறது. அதேபோல ஹெட் லைட், முன்புற கிரில், எல்.இ.டி யுடன் அடங்கிய பின்புற விளக்குகள் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்களோடு வெளிவர இருக்கிறது. மாருதி Alto 800 வாகனத்தில் உள்ளது போல இதிலும் ஹேட்ச் பேக் வசதி இடம் பெறுகிறது. கூடுதலாக டச் ஸ்கிரின் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட BS6 1.0 லிட்டர் ட்ரிபுள் சிலிண்டர் K10B என்ஜின் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேனுவல் 5 ஸ்பீடு கியர் பாக்ஸை உள்ளடக்கிய இந்த வாகனத்தில், 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனும் இடம் பெற உள்ளது. இவை தவிர, கூடுதலாக ஹேட்ச் பேக் வசதியுடன் வேகன் ஆர் 1.2 பெட்ரோல் என்ஜின் உள்ளடக்கிய வாகனமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com