9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு

9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
9 நாட்களில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி  - மத்திய அரசு

இந்தியாவில் 9 நாட்களில் 16 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அமெரிக்காவில் 10 நாட்களும், பிரிட்டனில் 18 நாட்களும் ஆன நிலையில் இந்தியா 6 நாட்களில் அந்த எண்ணிக்கையை தொட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

9ஆம் நாளான நேற்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 31 ஆயிரத்து 466 பேருக்கு ஊசி போடப்பட்டதாகவும் இதில் 10 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது தெரியவந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com