டெல்லி: போராடும் விவசாயிகளுக்கு 20,000 குளிர்தாங்கும் ஆடைகளை அனுப்பிய பஞ்சாப் வணிகர்கள்!

டெல்லி: போராடும் விவசாயிகளுக்கு 20,000 குளிர்தாங்கும் ஆடைகளை அனுப்பிய பஞ்சாப் வணிகர்கள்!
டெல்லி: போராடும் விவசாயிகளுக்கு 20,000 குளிர்தாங்கும் ஆடைகளை அனுப்பிய பஞ்சாப் வணிகர்கள்!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக, பஞ்சாப் லூதியானாவை சேர்ந்த வணிகர்கள் ஒன்றிணைந்து சுமார் 20,000-க்கும்மேற்பட்ட குளிர்தாங்கும் ஆடைகளை அனுப்பியுள்ளனர்.

பஞ்சாப் லூதியானாவை சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் அடங்கிய 500-க்கும் மேற்பட்டோர் இணைந்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு குளிர்கால ஆடைகளை மற்றும் பொருட்களை ஏற்றிய ஒரு டிரக்கை திக்ரி எல்லைக்கு அனுப்பியுள்ளனர்.

இதுபற்றி பேசிய மூன்று உணவகங்களின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா, "நாங்கள் ஒன்றிணைந்து சுமார் 2,000 போர்வைகள், 5,000 வார்மர்கள், 10,000 மஃப்லர்கள், 6,000 சாக்ஸ், 1,000 உள்ளாடைகள், 2,000 முழங்கால் தொப்பிகள், 500 கம்பளி தொப்பிகள் போன்றவற்றை விவசாயிகளுக்காக அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் 20 நாள்களுக்கும் மேலாக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தீவிரமாகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com