கொரோனா புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கொரோனா புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குஜராத்தில் தியேட்டர்களுக்கு முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், மகாராஷ்டிரா செல்ல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மத்திய அரசு சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மாநிலங்களுக்கு இடையே தனிநபர் நகர்வு, போக்குவரத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 70 சதவிகிதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளவும், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பூசியை அதிகரிக்கவேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்கள், பணியிடங்கள், கூட்டம் நிறைந்த இடங்களில் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளை கண்டிப்பாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் போக்குவரத்துக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இதுபோன்ற கட்டுப்பாடுகளை மாநில அரசு தனியாக செயல்படுத்தக்கூடாது எனவும் அந்த நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும் எனவும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இந்த நெறிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com