விவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து

விவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து
விவசாயக்கடன் தள்ளுபடி : ம.பி முதலமைச்சர் முதல் கையெழுத்து

மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்து தனது முதல் கையெழுத்தை இட்டார்.

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள கமல்நாத், தனது முதல் கையெழுத்தாக மற்றும் அமைச்சரவை முடிவாக மாநில விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பரப்புரையின் போதே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்திற்குள்ளாக அல்லது 10 நாட்களுக்குள்ளாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் தெரிவித்திருந்தது. அதேபோல் தற்போது அந்த வாக்குறுதியை கமல்நாத் நிறைவேற்றியுள்ளார். அவரது புதிய உத்தரவின் படி, ரூ.2 லட்சம் வரையில் பெற்றுள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்யலாம் எனக் கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா 109  இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் சமாஜ் வாதி 1 இடத்தில் வெற்றி கண்டன. சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலரின் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியானது. 

இதையடுத்து முதலமைச்சருக்கான போட்டியில் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவியது. பின்னர் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் கமல்நாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்நிலையில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். போபாலில் நடைப்பெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச மாநில கவர்னர் ஆளு‌ர் ஆனந்திபென் படேல் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக்கொண்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com