உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித் - யார் இவர்? பின்னணி என்ன?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித் - யார் இவர்? பின்னணி என்ன?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் யு.யு.லலித்  - யார் இவர்? பின்னணி என்ன?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்றார் யு.யு.லலித், 74 நாட்கள் மட்டும் பதவி வகிக்க உள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித், இன்று சனிக்கிழமை முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

யார் இந்த உதய் உமேஷ் லலித்?

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1957இல் பிறந்த யு.யு.லலித், 1983ஆம் ஆண்டில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பாபர் மசூதி இடிப்பு வழக்கு, 2ஜி அலைக்கற்றை வழக்கு, பாலிவுட் நடிகர் சல்மான் கான் வன உயிரினங்களை வேட்டையாடிய வழக்கு, சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு எனப் பல முக்கிய வழக்குகளில்  வழக்கறிஞராக ஆஜராகியிருக்கிறார் யு.யு.லலித். இவரது தந்தை யு.ஆர். லலித், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகவும் இருந்தார். இவரது தாத்தா ரங்கநாத் லலித், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே சோலாப்பூரில் ஒரு வழக்கறிஞராக இருந்தார்.

யு.யு.லலித்தின் சட்டப்புலமை காரணமாக 2014இல் அவர் நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் மூலம் கீழமை நீதிமன்றத்திலோ உயர் நீதிமன்றத்திலோ நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது நீதிபதி ஆக விளங்குகிறார் யு.யு. லலித். மேலும் இவர், 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி, நவம்பர் 8ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.

யு.யு.லலித்துக்கு அமிதா லலித் என்ற மனைவியும், ஷ்ரீயாஷ் லலித், ஹர்ஷத் லலித் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

இதையும் படிக்க: இலவச வாக்குறுதிகள் வழங்க தடைகோரிய வழக்கு - 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com