டெல்லியில் பச்சிளம் குழந்தை ஒன்று, பிறந்த சில நிமிடங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப்பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை பொதுவாக பிறந்த ஒரு வருடத்தில்தான் நடக்கப்பழகும். எனவே, குழந்தை நடை பழகும் காட்சியை காண பெற்றோர்கள் ஆவலாகக் காத்திருப்பர். ஆனால், டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து சில நிமடங்களே ஆன, ஒரு குழந்தையை செவிலியர் ஒருவர் தனது கைகளால் பிடித்துள்ளார். அந்தக் குழந்தை செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகுகிறது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த மே 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்தக் காட்சியை தற்போது வரை 5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து வியந்துள்ளனர்.

