வறுமையால் ரூ.15,000க்கு பச்சிளங்குழந்தையை விற்ற தந்தை
உத்தரப்பிரதேசத்தில் வறுமையின் காரணமாக, பிறந்த குழந்தையை தந்தையே விற்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், 15,000 ரூபாய்க்கு தந்தை விற்றிருக்கிறார். இதையறிந்த தாய், மருத்துவமனை நிர்வாகத்தின் உதவியுடன் குழந்தையை மீட்டுள்ளார். வறுமையின் காரணமாக வேறு வழியில்லாமல் குழந்தையை விற்றதாக அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தின் மிர்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சு மவுரியா (30). தனது கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை 42ஆயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். வட மாநிலங்களிலும் திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், வறுமை காரணமாக குழந்தைகளை பெற்றோர் விற்பது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.