”என்னால வீக் எண்ட் வர காத்திருக்க முடியல” - வெப் சீரிஸ் பாக்க லீவ் கேட்ட பத்திரிகையாளர்!

”என்னால வீக் எண்ட் வர காத்திருக்க முடியல” - வெப் சீரிஸ் பாக்க லீவ் கேட்ட பத்திரிகையாளர்!

”என்னால வீக் எண்ட் வர காத்திருக்க முடியல” - வெப் சீரிஸ் பாக்க லீவ் கேட்ட பத்திரிகையாளர்!
Published on

அலுவலக ஊழியர்களுக்கு பொதுவாகவே வார விடுமுறை இல்லாமல் ஒரு நாள் விடுமுறை எடுப்பது ஏதேனும் அவசர தேவையோ அல்லது உடல்நலம் சரியில்லாமல் போனால் நிகழும். ஆனால் மாதத்தில் ஒரு நாள் ஓய்வு எடுப்பதற்காகவோ அல்லது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக லீவுக்காக எக்கச்சக்கமான பொய் புரட்டுகளை அள்ளிவிட்டே சாதிக்க வேண்டியதாக இருக்கும்.

இருப்பினும் அதீத வேலைப்பளு காரணமாக ஊழியர்களுக்கு நிறுவனங்கள் ஒரு நாளாவது கட்டாய விடுப்பு கொடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், alt news-ல் பணியாற்றும் பத்திரிகையாளர் அபிஷேக் குமாரின் லீவ் லெட்டர் ஒன்று ட்விட்டர் தளத்தில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அதன்படி லீவ் கேட்டு தனது உயரதிகாரிகளுக்கு அபிஷேக் மெயில் மூலம் வலியுறுத்திருக்கிறார். விடுப்பு கேட்டு மெயில் அனுப்புவதில் என்ன புதுமை இருக்கிறது என கேள்வி எழலாம். ஆனால் அபிஷேக் தனது லீவ் மெயிலில், “வீட்டில் ரிலாக்ஸாக pitchers season 2 பார்க்க வேண்டும். ஆகையால் டிசம்பர் 23ம் தேதி விடுமுறை தேவைப்படுகிறது. ஏனெனில், ரொம்ப பிடித்தமான இந்த வெப் சீரிசை வார நாட்களில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து இரவெல்லாம் கண்விழித்து பார்க்கிறேன். இதனால் என்னுடைய தூக்கம் கலைகிறது. என்னுடைய வேலைகளை வழக்கம்போல டிசம்பர் 24ம் தேதி தொடர்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த மெயில் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்த அபிஷேக் குமார், “விடுமுறையை சாதாரணமாக்குங்கள்.
உங்கள் உடல்நிலை சரியில்லாத போதோ அல்லது நீங்கள் இல்லாமல் ஒரு வேலை நடக்காது என்றபோது மட்டும் லீவ் எடுப்பது தேவையானது என்று அர்த்தமல்ல” என்றும் பதிவிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டை கண்ட இணையவாசிகள் பலரும் ஆதரவாக கமெண்ட் செய்தும், சிலர் கிண்டலாகவும் பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com