மக்களை வாட்டும் பெட்ரோல் விலை உயர்வை பகடி செய்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்களை வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இன்று பெட்ரோலின் விலை 27 காசுகள் அதிகரித்து 92.25 ரூபாய்க்கும், டீசல் விலை 32 காசுகள் அதிகரித்து 85. 63 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக ராஜஸ்தானில் பெட்ரோல் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை நையாண்டி செய்து நெட்டிசன்கள் இணையத்தில் மீம்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் இருந்து சில...