”ரோடு என்ன உங்க வீட்டு சொத்தா?” : நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த No Parking Board!

”ரோடு என்ன உங்க வீட்டு சொத்தா?” : நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த No Parking Board!

”ரோடு என்ன உங்க வீட்டு சொத்தா?” : நெட்டிசன்களை கொதித்தெழ வைத்த No Parking Board!
Published on

மெட்ரோ நகரங்களில் வசிப்பவராக இருந்தால் கட்டாயம் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான சண்டைகளை பார்த்திருப்பீர்கள் இல்லை அதில் நீங்களே கூட ஈடுபட்டிருக்கலாம்.

இப்படியாக பார்க்கிங் செய்வதில் பல தகராறுகள் நாட்டின் பல இடங்களில் தினந்தோறும் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன. அதுவும் குடியிருப்பு பகுதிகளில் நடக்கும் பார்க்கிங் சண்டைகளெல்லாம் உணர்ச்சி மிகுந்ததாகவே இருக்கும்.

இந்த நிலையில், ஆதித்யா மொரார்கா என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், no parking board தொடர்பான ஃபோட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதில், கர்நாடகாவின் கோரமங்கலாவில் உள்ள வீட்டின் சுவற்றில் “Don't even think of parking here" அதாவது, ”இங்கு உங்கள் வண்டியை நிறுத்துவது பற்றி யோசிக்கக் கூட செய்யாதீர்கள்” எனவும், மற்றொரு வீட்டின் முன் "No parking not 5 minutes not 3 seconds not at all" அதாவது ”5 நிமிஷம், 3 நொடிகள் என எப்போவுமே இங்க உங்க வண்டியை பார்க் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போட்டோவை பகிர்ந்து, “கோரமங்கலாவில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் எப்போதும் வாகன ஓட்டிகளுடன் சாந்தமாகவே இருக்கமாட்டார்கள் போல” என கேப்ஷன் இட்டுள்ளார்.

இந்த ட்வீட் இணையவாசிகளிடையே தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதன்படி, பலரும் கோரமங்கலா புனேவாக மாறிவிட்டது என்றும், நீங்கள் புனேவுக்கு சென்றிருக்க மாட்டீர்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், வீட்டு கதவு முன்பு பார்க்கிங் செய்யக் கூடாது என்பதெல்லாம் நியாயம்தான். ஆனால், வீட்டு சுற்றுச்சுவர் முன் நிறுத்தக் கூடாது சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சாலை என்ன உங்களுக்கு சொந்தமானதா? என ஒரு பதிவர் காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com