குடியரசு தின விழாவில் ராகுல்காந்திக்கு அவமதிப்பு நடந்ததாக விமர்சனம்
குடியரசு தின விழாவில் ராகுல்காந்திக்கு அவமதிப்பு நடந்ததாக விமர்சனம்web

‘குடியரசு தின விழாவில் ராகுலுக்கு அவமதிப்பா?’ சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம்!

குடியரசு தின விழாவில் ராகுல்காந்திக்கு அவமதிப்பு நடந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.
Published on
Summary

குடியரசு தின விழாவில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே 3ஆவது வரிசையில் அமர வைக்கப்பட்டதால், இது அவமதிப்பாக கருதப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2024 சுதந்திர தின விழாவிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு 3ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அரசமைப்பின்படி, பிரதமருக்கு அடுத்த பொறுப்பில் இருக்கும் இருவரும் இவ்வாறு அமரவைக்கப்பட்டது அவமதிப்புக்குரியது என பலரும் விமர்சித்து வருகின்றனர். 2024இல் நடந்த சுதந்திர தின விழாவிலும் ராகுல்காந்திக்கு 2ஆவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com