உயிருடன் உள்ள முதியவருக்கு இறப்புச் சான்றிதழ்; நிலத்துக்காக மருமகன் செய்த காரியம்!

உயிருடன் உள்ள முதியவருக்கு இறப்புச் சான்றிதழ்; நிலத்துக்காக மருமகன் செய்த காரியம்!

உயிருடன் உள்ள முதியவருக்கு இறப்புச் சான்றிதழ்; நிலத்துக்காக மருமகன் செய்த காரியம்!
Published on

எந்த விசாரணையும் இல்லாமல் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் கோரியா மாவட்டத்தில் உள்ள புதார் கிராமத்தில் வசிப்பவர் கலிச்சரன் விப்தா (79). இவர், உயிருடன் ஆரோக்கியமான நிலையில் உள்ள தனக்கு பஞ்சாயத்து அதிகாரிகள் இறப்புச் சான்றிதழ் வழங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் தனது இறப்புச் சான்றிதழை ரத்து செய்யுமாறு தெஹ்ஸில் வருவாய் அலுவலகத்திற்கு தினமும் அலைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு கலிச்சரன் விப்தா, தெஹ்ஸில் வருவாய் அலுவலகத்தில் குடும்ப நிலங்களை பிரிப்பதற்காக விண்ணப்பித்துள்ளார். இதையறிந்த அவரது மருமகன், அந்த நிலங்களை அபகரிப்பதற்காக உள்ளூர் கிராம பஞ்சாயத்து செயலாளரிடம் கலிச்சரன் விப்தா கடந்த 1958-ம் ஆண்டு இறந்து விட்டதாக பொய் கூறி இறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதையடுத்து தனக்கு இறப்புச் சான்று அளிக்கப்பட்ட விஷயம் தெரியவந்ததும், உயிருடன் இருக்கும் தனக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக கலிச்சரன் விப்தா கூறியுள்ளார். எந்த விசாரணையும் இல்லாமல் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக கலிச்சரன் விப்தாவின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோரியா மாவட்ட ஆட்சியர் எஸ்.என்.ரத்தோர் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com