நேபாளப் பிரதமரின் "வைரஸ்" பேச்சும் ! இந்தியாவின் அதிருப்தியும்

நேபாளப் பிரதமரின் "வைரஸ்" பேச்சும் ! இந்தியாவின் அதிருப்தியும்
நேபாளப் பிரதமரின் "வைரஸ்" பேச்சும் ! இந்தியாவின் அதிருப்தியும்

இந்தியாவுக்குப் பாகிஸ்தான், சீனாவுடன்தான் எப்போதும் எல்லை தொடர்பான பிரச்னைகளும் சர்ச்சைகளும் இருந்து வந்த சூழலில், இப்போது புதிதாக நேபாளம் எல்லைப் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. அதவும் நேபாள நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் வெளியிட்ட புதியவரைப்படம் இந்தியா தரப்பில் கடும் அதிருப்தியைக் கிளப்பியிருக்கிறது.

வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் எப்போதும் பிரச்னைகள் இருந்ததில்லை. அதன்படி இந்தியாவும் நேபாளமும்1 800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருகிறது.

இந்நிலையில் மே மாதம் 8 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தராகாண்ட்டில் உள்ள லிபுலேக் கணவாயை கைலாஷ் மானசரோவருடன் இணைக்கும் சாலையைத் திறந்து வைத்தார், இதை நேபாளம் எதிர்த்தது. கைலாஷ் - மானசரோவர் யாத்ரீகர்களு்ககாக இந்தச் சாலை திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சாலை மூலம் பயண நேரம் வெகுவாக குறையும் என்றும் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்தார். இவையெல்லாம் நேபாளத்துக்குக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நேபாளம் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் கேபி ஷர்மா ஓலி " இந்தியாவிலிருந்து சட்ட விரோத வழிகளில் நேபாளத்துக்குள் வருபவர்கள் கொரோனாவைப் பரப்புகின்றனர். இதற்கு உள்ளூர் பிரதிநிதிகளும் கட்சித் தலைவர்களுமே காரணம். இந்தியாவிலிருந்து இங்கு பலர் முறையான சோதனையை மேற்கொள்ளாமல் நுழைகிறார்கள். இவர்களால் நேபாளத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போது சீனா, இத்தாலி வைரஸ்களை விட இந்திய வைரஸ் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. அதிகம் பேர் கிருமித்தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.

மேலும் புதிய நேபாள வரைபடத்தை வெளியிட்ட ஷர்மா ஓலி " இந்தியப் பகுதிகளான காலாபானி-லிம்பியாதுரா, லிபுலேக் பகுதியை என்ன ஆனாலும் நேபாளிக்குக் கொண்டு வருவோம்" எனத் தெரிவித்துள்ளார். இது இந்தியத் தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com