‘நவீன இந்தியாவின் சிற்பி..!' - நேருவை நினைவுகூர்ந்த நெட்டிசன்கள்

‘நவீன இந்தியாவின் சிற்பி..!' - நேருவை நினைவுகூர்ந்த நெட்டிசன்கள்

‘நவீன இந்தியாவின் சிற்பி..!' - நேருவை நினைவுகூர்ந்த நெட்டிசன்கள்
Published on

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி என்னும் பெருமைகளுக்கு உரிய பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை நினைவுகூரும் விதமாக நேருவுக்கு பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக புகழாரம் சூட்டி வருகின்றனர். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன..

Thirunavukarasan Manoranjitham /FB


கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பொருளாதாரம்.. என்று எந்த துறையை எடுத்தாலும், இந்தியா இன்று அறுவடை செய்வதெல்லாம் நேரு போட்ட விதைகளை தான்!

Shahjahan R / FB

"மதவாதமும் வகுப்புவாதமும் ஆபத்தானவை. அவை இந்த நாட்டு மக்களைப் பிளவுபடுத்தலை அனுமதிக்க முடியாது. அவற்றை ஓட்டுக்களைப் பெற பயன்படுத்துவதை விட அவமானமில்லை. அப்படி மதவாதம் மற்றும் வகுப்புவாதம் மூலம் பெறும் ஒரு ஓட்டு கூட எனக்கு வேண்டாம். அவற்றைத் தொடர்ந்து எதிர்ப்பேன்" என்று முழங்கிய தலைவர் நேரு. 

Ramanujam Govindan / FB

இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், தொன்மை போன்றவற்றின் மீது ஆழ்ந்த பிடிப்பு இருந்தாலும் அதில் மூட நம்பிக்கையோ, வெறியோ இல்லாதவர். நவீன விஞ்ஞானத்தின் மேல் தீராத ஆசை உடையவர். ஆனால் மேற்குலகின் மிதமிஞ்சிய பொருள்மையவாதம், முதலாளித்துவம் போன்றவற்றை வெறுத்தவர். இப்படி ஒரு சமநிலை கொண்ட ஒரு மாபெரும் தலைவர் நேரு.

Rekha Kannadasan/twitter

விடுதலை போரில் ஒன்பது ஆண்டுகளை சிறையில் கழித்த தியாகி; தன் கனவுகள் வழியே தேசத்தை கட்டியெழுப்பிய தலைவன்; இன்றைய இந்தியாவின் அசைக்க இயலா அடிக்கட்டுமானம்; குழந்தைகளை நேசித்த ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்வோம்.

Anantharamakrishnan Senthivel//twitter

இந்திய ஒன்றியம் இன்றும் பல்சமய, மொழி, இன அடையாளத்தோடு மதசார்பற்ற ஒன்றியமாக விளங்குவதற்கு முதல் காரணமான முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு புகழஞ்சலி.

Mirror / twitter

நவபாரத சிற்பி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அணைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பெருந்தொழிற்சாலைகள், பொருளாதார திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், மின்சாரம், விண்வெளி ஆராய்ச்சி, ஐஐடி... பாரதத்தை நிர்மானித்தவன்; குழந்தைகளின் உறவினன்; ஜவஹர்லால் நேரு ஒரு மந்திரம். புகழ் நிலைக்கட்டும்.

Siddiq / twitter

இன்று இந்தியா பன்முகத் தன்மையோடு மதசார்பற்ற நாடாக விளங்குவதற்கு முதல் முக்கிய காரணமான முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Kingsaravanandmk / twitter

இன்று, இந்தியா தனது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஜியின் பிறந்த நாளை கொண்டாடுகிறது: சகோதரத்துவம், சமத்துவவாதம் மற்றும் நவீன கண்ணோட்டத்தின் மதிப்புகளுடன் நம் நாட்டின் அடித்தளத்தை அமைத்த ஒரு உயர்ந்த தொலைநோக்கு பார்வையாளர். இந்த மதிப்புகளைப் பாதுகாப்பதே நம் முயற்சி.

Dr srinivasan / twitter

இந்திய தேசத்தை தொலைநோக்கு பார்வையோடு வளர்ச்சிக்கு வழி காட்டியவர் நேரு.

Paraneetharan Kaliyaperumal / twitter

சோவியத் யூனியன் மாடலை பின்பற்றி இந்தியாவை கட்டமைத்தவர் நேரு. அவர் உருவாக்கிய Planning commission இந்தியா முழுவதும் பரந்து விரிந்து ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்தது.

Ganesan Beemrao Ex.MLA / twitter

பண்டித நேரு அவர்களின் பிறந்த தினமான இன்று குழந்தைகளுக்கு வாழ்த்து சொல்லுவோம். குழந்தைகளிடம் அன்பு செலுத்துவோம், அவர்கள் மீதான எந்தவிதமான வன்முறைகளையும் எதிர்த்து போராடுவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com