நீட் விவகாரம்: பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

நீட் விவகாரம்: பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு

நீட் விவகாரம்: பிரகாஷ் ஜவடேகருடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு
Published on

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி, மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனும் டெல்லி சென்றுள்ளனர்.

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர்கள், நீட் தேர்வு குறித்து தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். இதே விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், நட்டாவையும் அவர்கள் சந்திக்க உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com