நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு மனு முதல் புத்தாண்டில் இந்தியாவின் முதல் டி20 போட்டி வரை ! #Topnews
மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு.கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக வாதம்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலை 100 சதவிகிதம் நேர்மையாக நடத்தியிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி விளக்கம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
சிறார் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் உட்பட இருவர் கோவையில் கைது.
பாகிஸ்தானில் குருத்வாரா தாக்கப்பட்டதை கண்டித்து இந்தியாவில் சீக்கியர்கள் போராட்டம். அண்டை நாடுகளில் சிறுபான்மையினரின் நிலைக்கு இதுவே உதாரணம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கருத்து.
ஈராக்கில் அமெரிக்க படைவீரர்கள் தங்கியுள்ள இடம் மீது ஏவுகணைத் தாக்குதல். ஈரான் ராணுவ கமாண்டர் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி.
ஓய்வு அறிவித்தார் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான். அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக அறிவிப்பு.
அசாம் மாநிலம் குவஹாத்தியில் இன்று இந்தியா - இலங்கை இடையே முதல் டி20 கிரிக்கெட் போட்டி.