வெளியானது நீட் தேர்வு முடிவுகள்: முதலிடம் பிடித்து தமிழக மாணவர் அசத்தல்!

இன்று இரவு வெளியான நீட் தேர்வு முடிவில், தமிழக மாணவர் பிரபஞ்சன் 99.99 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியிருந்தனர். தமிழகத்தில் மட்டும் 1.44 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த நீட் தேர்வின் முடிவுகள் இன்று இரவு வெளியிடப்பட்டன. முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள்
நீட் தேர்வு முடிவுகள்புதிய தலைமுறை

இதில், தமிழகத்தில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்தில் 57,250 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருந்த நிலையில், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com