ஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு !

ஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு !
ஒரு வழியாய் முடிந்த நீட் தேர்வு !

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.‌ காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது.

நாடு முழுவதும் 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். தமிழகம், கேரளா, மாகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர். தமிழகத்தில் மட்டும் 170 மையங்களில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். 24,720 மாணவ, மாணவிகள் தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதினர். 

சுமார் 5 ஆயிரம் தமிழக மாணவ, மாணவிகள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த சில மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். கடும் சோதனைக்கு பிறகு காலை 7.30 மணி முதல் 9.30‌ மணி வரை மாணவ, மாணவிகள் 2 கட்டங்களாக நீட் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 7.30 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்ற பலர், தங்களால் காலை உணவை உட்கொள்ள முடியவில்லை என வேதனையுடன் கூறினர்.  மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் தாங்கள் காத்திருப்பதற்கு ஒரு இடம் ஒதுக்கியிருக்கலாம் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com