நீட் தேர்வு|குவியும் முறைகேடு புகார்கள்; விசாரணையில் வெளிவரும் புது தகவல்கள்.. அமைச்சர் சொன்ன பதில்!

”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு
நீட் தேர்வுஃபேஸ்புக்

நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில், ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, விடைத்தாள்களை திருத்துவதில் குளறுபடி என பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் விசாரணையில், வரும் ஜூன் 23ஆம் தேதி, கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 பேருக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Neet
Neet

இந்த நிலையில் டெல்லி, தமிழ்நாடு, பீகார், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நீட் தேர்வு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்த வருட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறுதேர்வு நடத்த வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் கோரிக்கைவைத்து வருகின்றனர். மேலும் பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் பல்வேறு வழக்குகளும் நடந்து வருகிறது.

மறுபுறம், இந்த மோசடிகளுக்கு எதிராக பல மாநிலங்களில் போலீசார் விசாரணை நடத்தி ஏராளமானோரை கைதுசெய்து வருகின்றனர். குறிப்பாக, குஜராத்தின் கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த முறைகேட்டில் ரூ.2 கோடிக்கு மேல் கைமாறியிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்க: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல்.. களமிறங்குகிறார் பிரியங்கா காந்தி!

நீட் தேர்வு
“நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் வரிசையில் அகிலேஷ் யாதவ்...

பீகாரில் வினாத்தாள் கசிய விடப்பட்ட விவகாரத்தை அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பீகாரில் 4 மாணவர்களைத் தவிர மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்த வினாத்தாள் மற்றும் விடைகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்து தலா ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டு உள்ளதாகவும், இவை பாட்னாவில் இருந்து ஓர் அறையில் இருந்து எடுத்து வரப்பட்டதாகவும், தவிர கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பின்தேதியிட்ட 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நீட் தேர்வு
நீட் தேர்வுtwitter

இந்த நிலையில், ”நீட் தேர்வு விவகாரத்தில் தவறு செய்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நீட் தேர்வை நடத்துவதில் இரண்டு வகையான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அரசாங்கம் இந்த பிரச்னையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. தேசிய தேர்வு முகமையின் மூத்த அதிகாரிகள் உட்பட எந்த அதிகாரிகளும் தவறு செய்திருந்தால், அவர்கள் தப்ப மாட்டார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய தேர்வு முகமை ஒரு தன்னாட்சி நிறுவனமாக இருந்தாலும் அதன் செயல்பாட்டில் நிறைய சீர்திருத்தங்கள் தேவை. இதுகுறித்து அரசு கவலை கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தொடரும் சம்பவங்கள்| உணவில் பிளேடு.. உறுதிசெய்து இழப்பீடு வழங்கிய ஏர் இந்தியா.. நிராகரித்த பயணி!

நீட் தேர்வு
நீட் தேர்வு: கருணை மதிப்பெண்கள் ரத்து.. மறுதேர்வு எப்போது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com