பூதாகரமான நீட் முறைக்கேடு.... முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வும் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கடைசி நேர அறிவிப்பால் தொலைதூர மையங்களுக்கு தேர்வெழுத சென்ற தேர்வர்கள் அவதியடைந்துள்ளனர்.
 முதுநிலை நீட் தேர்வு
முதுநிலை நீட் தேர்வு முகநூல்

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் நெட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு
நீட் தேர்வுஃபேஸ்புக்

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே நடந்து முடிந்த நெட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வையும் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

 முதுநிலை நீட் தேர்வு
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு; சென்னையில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கைது

இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 297 நகரங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 757 மருத்துவர்கள் நீட் முதுநிலை தேர்வுக்கு தயாராகி அந்தந்த தேர்வு மையங்களுக்கு நேற்று இரவே சென்றுவிட்டார்கள். குறிப்பாக இன்று காலை 9 மணியளவில் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், மூன்றாவது முறையாக இந்த தேர்வு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடர்பாக பேசி இருந்த கல்வி அமைச்சகம், “இந்த தேர்விலும் பல்வேறு முறைக்கேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது; எதிர்காலத்தில் இந்த தேர்வின் மூலம் வரும் பல்வேறு பிரச்னைகளை தடுப்பதற்காகவை கடைசி நேரத்தில் இந்த தேர்வை நாங்கள் ரத்து செய்கிறோம். அடுத்தகட்டமாக இந்த தேர்வு நடைபெறும் தேதியை அறிவிப்போம்” என தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் வெளிமாநிலங்களில் இருந்த தேர்வு மையங்களுக்கு செல்ல சில நாட்களுக்கு முன்பே சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேர்வு எழுத தயாராக இருந்த எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 முதுநிலை நீட் தேர்வு
அந்த எமோசன்.. அந்த வெறி! 2023 ODI WC-ல் ஏற்பட்ட வலி! 2024-ல் ஆஸியை பழிதீர்த்து ஆப்கானிஸ்தான் வரலாறு!

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி என பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு முறைக்கேடு
நீட் தேர்வு முறைக்கேடுமுகநூல்

மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு வாரியத்தின் நடைமுறைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும் என்றும், இதற்காக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துவதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேர்வின் நேர்மையை உறுதி செய்யும் விதமாக மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

 முதுநிலை நீட் தேர்வு
பால் கேன்கள், அட்டை பெட்டிகள், நீர் தெளிப்பான்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி; டெல்லி கூட்டத்தில் பரிந்துரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com