“தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன” - முன்னாள் நீதிபதிகள் அதிர்ச்சி கடிதம்!

தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு கடிதம் முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்pt web

தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் தேர்தல் ஆணையருக்கும் முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம், எஸ்.விமலா போன்றோர் கடிதம் எழுதியுள்ளனர்.

மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல்puthiya thalaimurai

முன்னாள் நீதிபதிகள் எழுதிய கடிதத்தில், “நடந்து முடிந்த தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றன. புகார்கள் குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தலில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சு இருந்தது.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தலையிட வேண்டும்; ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். சிக்கல் எழுந்தால் அதை சரிசெய்ய 5 நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குதிரைபேரம் உள்ளிட்ட அரசமைப்பு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com