நீட் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மனம் சோர்வு அடையாமல் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 5,749 மாணவர்களில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 675 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதலிடத்தையும், தேசிய அளவில் 1,249 இடத்தையும் பெற்றுள்ள மாணவர் குருதேவ நாதனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற இயலாத மாணவர்களும் மனம் சோர்வு அடையாமல் முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.