``இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது” - மோடி பெருமிதம்

``இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது” - மோடி பெருமிதம்
``இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது” - மோடி பெருமிதம்
Published on

இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது குறித்துப் மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். அந்நிகழ்ச்சியில், நீர் நிலைகளில் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 87-வது மனதின் குரல் வாயிலாக பேசுகிறேன் நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த வாரத்தில் நாம் ஒரு சாதனையை எட்டி இருக்கிறோம். அது என்னவெனில், கடந்த வாரத்தில் 400 கோடி பில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 30 லட்சம் கோடி ரூபாய்) என்ற ஏற்றுமதி இலக்கை இந்தியா எட்டியுள்ளது. நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அயல் நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதையே இது காட்டுகிறது.

உதாரணத்துக்கு, தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்கள் அதிகளவில் அரேபியாவில் கிடைக்கின்றன; அது போலவே ஹிமாச்சல், உத்தரகாண்ட் மாநிலத்தில் விளையும் சிறுதானியங்கள் டென்மார்க் நாட்டில் கிடைக்கின்றன; மட்டுமல்லாது ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் பங்கனபல்லி, சுவர்ணரேகா மாம்பழ ரகங்கள் தென்கொரியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது” என்றுகூறி இது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “முதல் முறையாக நாகலாந்தின் கிங் பெப்பர் என்ற முழக்கம் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார். தொடர்ந்து கடந்த வாரம் பத்ம விருது பெற்ற பாபா சிவானந்த் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “126 வயது மதிக்கத்தக்க பாபா சிவானந்தரின் உடலுறுதி என இந்த இரண்டும் இன்று தேசத்தின் விவாதப்பொருளாக இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் பலரின் கருத்துக்களை நான் கவனித்தேன். அதில் சிலவற்றில் பாபா சிவானந்தர் தனது வயதை விட 4 மடங்கு குறைந்த வயதானவரை விடவும் அதிக உடல் உறுதியோடு இருக்கிறார் என்பது போன்று சொல்லப்பட்டிருந்தது. அது சரிதான். உண்மையாகவே பாபா சிவானந்தரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் கருத்து ஊக்கம் அளிக்க வல்லது. அவருடைய நீண்ட ஆயுளுக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.

பின் நீர் ஆதாரங்களின் பாதுகாப்பு குறித்து அவர் பேசுகையில், “நண்பர்களே... நமது தேசத்தில் நீர் பராமரிப்பு, நீர் ஆதாரங்களின் பாதுகாப்பு ஆகியவை பல நூற்றாண்டுகளாகவே சமூகத்தின் இயல்பின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. நீர் பராமரிப்பை தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக தேசத்தில் பலர் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு நண்பர், தனது பகுதியில் இருக்கும் குளங்களையும்-ஏரிகளையும் தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அருண் 150-க்கும் மேற்பட்ட குளங்கள்-ஏரிகளில் கழிவுகளை அகற்றும் கடமையை மேற்கொண்டிருக்கிறார். இதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அடுத்த மாதம் பல பண்டிகைகள் புனித நாட்கள் வரை இருக்கின்றன. சில நாட்கள் கழித்து நவராத்திரி பண்டிகை வரை இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது பண்டிகைகளை கொண்டாடுவோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com