“நெல்,கோதுமை மட்டுமில்லாமல் மாற்று பயிர்களை விதைக்க வேண்டும்" - பிரதமர் மோடி

“நெல்,கோதுமை மட்டுமில்லாமல் மாற்று பயிர்களை விதைக்க வேண்டும்" - பிரதமர் மோடி

“நெல்,கோதுமை மட்டுமில்லாமல் மாற்று பயிர்களை விதைக்க வேண்டும்" - பிரதமர் மோடி
Published on

நெல் மற்றும் கோதுமை மட்டுமல்லாது மாற்று பயிர்களை விவசாயிகள் விளைவிக்க வேண்டிய தேவை உள்ளது என பாரத பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் உணவு உற்பத்தி சார்ந்த புரட்சியை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இயற்கை முறை விளை பொருட்கள் மற்றும் ஃபுட் சலாட் தயாரிக்க தேவைப்படும் காய்கறிகளை விளைவிக்க வேண்டும் எனவும் மோடி தெரிவித்துள்ளார். 

“நெல் மற்றும் கோதுமையை கடந்து மாற்று பயிர்களை விளைவிக்கும் ஆப்ஷன்களை நாம் கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. விவசாயத்தின் ஒவ்வொரு பிரிவிலும் செயலாக்க பணிகளில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. காய்கறிகள், பழங்கள், மீன் வகைகள் என அனைத்திலும் இதை நடைமுறை படுத்த வேண்டிய தேவை உள்ளது. நவீன பதப்படுத்தும் கிடங்குகளை கொண்டு வந்தாக வேண்டும்” என தெரிவித்துள்ளார் மோடி. 

விவசாய உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் மதிப்புக்கூட்டு நடைமுறையை உணவு பொருட்களில் கொண்டு வருவது குறித்தும் மோடி பேசியுள்ளார். 

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவாசாயிகள் தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com