ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்... பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்... பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம்... பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்
Published on

ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தி உள்ளார்.

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டமானது பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் மெரினாவில் குவிந்து வருகின்றனர். இரவு, பகல் பாராமல் போராட்டம் தொடர்கிறது.

இதனையடுத்து போராட்டம் நடத்துபவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர்களுடன் தனது இல்லத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சரியான முடிவு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தீவிரமடையும் என்று அவர்கள் தெரிவித்து விட்டனர்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் நேரில் வலியுறுத்தினார். இச்சந்திப்பின் போது முதலமைச்சருடன் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். இதனிடையே, தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com