மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஹரிவன்ஷ் வெற்றி
மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த சுழலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹரிவன்ஷ் வெற்றி பெற்றார்.
மாநிலங்களவைத் துணை தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் கடந்த ஜூலை 1ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அந்தப் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.கே. ஹரிபிரசாதும் போட்டியிட்டனர். இதில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மொத்தம் 244 உறுப்பினர்கள் கொண்ட அவையில் காங்கிரஸ் வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகளையும் பெற்றனர்.